விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, ராக்காச்சி அம்மன் கோயில் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாதுகாப்பு கருதி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.