தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நாளை (பிப்.10) அதிகாலை வேளையில் பனிமூட்டம் நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மிதமான பனிமூட்டமும், சென்னை மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் லேசான பனிமூட்டமும் காணப்பட வாய்ப்புள்ளது. நிலப்பரப்பில் வீசும் கிழக்கத்திய காற்றினால் இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.