'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா' அமைப்பு, உலக நாடுகளை சேர்ந்த சுமார் 12,000 மாணவிகளை ஒன்றிணைத்து 'சக்திசாட்' எனும் பிரம்மாண்ட செயற்கைக்கோள் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நிலவின் மேற்பரப்பை மிக துல்லியமாக வரைபடம் செய்யவும், அங்குள்ள நீர் மற்றும் கனிம வளங்களை கண்டறியவும் இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம், வரும் 2026-ம் ஆண்டில் ஏவப்பட உள்ளது.