மேகமலை புலிகள் காப்பகம் பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத்தீ

2104பார்த்தது
மேகமலை புலிகள் காப்பகம் பெருமாள் மொட்டை பகுதியில் காட்டுத்தீ
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சாப்டூர் வனச்சரகத்தில் உள்ள பெருமாள் மொட்டை மலையில் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், மாலை அப்பகுதியில் காட்டுத்தீ பரவியது. கடும் வெயில் மற்றும் காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் அனைவரும் அடிவாரம் திரும்பினரா என்பது உறுதி செய்யப்படவில்லை. வனப்பகுதியில் தீ பரவியதால் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி