நடுரோட்டில் வைத்து அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் கொலை

30பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மகன் ஜோதிமுருகன் கொலை செய்யப்பட்டார். சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஜோதிமுருகன் என்பவரை மர்ம நபர்கள் சுற்றி வளைத்து ஆயுதங்களால் தலை, கழுத்து ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர். இதில் ஜோதிமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நன்றி: பாலிமர்