திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அதிமுக, பாமக, தவெக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா நடந்தது. இந்த விழாவில், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திமுக-வில் தன்னை இணைந்துகொண்டார். அமைச்சர் அவரை வரவேற்றார்.