வடசென்னையில் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான வி.எஸ்.பாபு தவெகவில் இன்று (பிப்., 07) இணைந்தார். சென்னையில் உள்ள இல்லத்தில் தவெக தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த அவர், கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும் தவெகவில் இணைந்து வருகின்றனர்.