ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் நந்தேலா பாஸ்கர ராவ் (90). இவர் வயது முதிர்வு தொடர்பான உடல்நலக் குறைபாடுகளால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 22) உயிரிழந்தார். அவர் 1984-ல் ஒரு மாதம் மட்டுமே முதலமைச்சராகப் பதவி வகித்தார். மாநில வரலாற்றில் மிகக் குறுகிய காலம் முதலமைச்சராகப் பதவி வகித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.