வங்கதேசத்தின் முக்கிய இந்து தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரமேஷ் சந்திர சென் (86), சிறைக்காவலில் இருந்தபோது காலமானார். பிப்.12-ம் தேதி வங்கதேச பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், இவரது மரணம் அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தூய்மையான அரசியல்வாதியாக அறியப்பட்ட இவரது மறைவு, சிறையில் உள்ள அவாமி லீக் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நடத்தப்படும் விதம் குறித்து சர்வதேச அளவில் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.