தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் முதல்வரை நேரில் சந்தித்த ஓபிஎஸ், திமுகவின் 5 ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்தது என கூறியிருந்தார். இதையடுத்து அவர் திமுக கூட்டணியில் இணையவுள்ளார் என்ற பேச்சு அடிபட்டது. அதுகுறித்த கேள்விக்கும் ஓபிஎஸ் மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஓபிஎஸ் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.