கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் தனிப்பட்ட செயலாளரின் மகன் தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரு சஞ்சயநகர் லோட்டே கொல்லஹள்ளியில் தனிப்பட்ட செயலாளர் சந்துருவின் மகன் ஹேமந்த் (20) இன்று (பிப்., 21) தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கான சரியான காரணம் தெரியவில்லை. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர், ஹேமந்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ். மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.