ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 மடங்கு அதிகமாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு சட்டப்படி அவருக்கு குறிப்பிட்ட காலம் சிறை தண்டனையுடன், சுமார் 2,200 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.