இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர (64) இன்று (அக்.16) காலமானார். 1986ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், சுமார் 8 ஆண்டுகளுக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அபாரமான பந்துவீச்சால் வெற்றிகளை குவித்தார். மேலும், கடந்த 1994ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.