அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-வும், முன்னாள் டிஜிபி-யுமான ஆர்.நடராஜ் தவெகவில் இணைந்துள்ளார். அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த இவர், தேர்தலுக்கு முன்பே தவெகவில் இணைவார் என்றும், அப்படி இணைந்தால் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஏற்கனவே பரவலாகப் பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.