திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள இதய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் சாலை அமைப்பில் ரூ.3.23 கோடி முறைகேடு புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கடந்த 25ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இந்த விசாரணையில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இதய நோய், உயர் ரத்த அழுத்தம் காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதாகவும், இதனால் விசாரணைக்கு நேரில் ஆஜராக முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.