முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனு தள்ளுபடி

2212பார்த்தது
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனு தள்ளுபடி
வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட கே.சி.வீரமணி தனது வேட்புமனுவில், சொத்து விவரங்களை குறைத்து, தவறான தகவல்களை தெரிவித்ததாக தொழிலதிபர் ராமமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி