அதிமுகவில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர் தங்கமணி?

52பார்த்தது
அதிமுகவில் இருந்து விலகும் முன்னாள் அமைச்சர் தங்கமணி?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கமணியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே எடப்பாடி பழனிசாமி தனது நாமக்கல் பரப்புரையை தாமதமாக நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு தங்கமணி அதிமுகவில் இருந்து விலகுவார் என செய்திகள் வெளியானாலும், அதனை அவர் மறுத்திருந்தார்.

தொடர்புடைய செய்தி