மூத்த பத்திரிகையாளரும், மாநிலங்களவை முன்னாள் எம்பியுமான ஹெச்.கே. துவா (88), உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் இன்று (மார்ச்.4) காலமானார். முன்னாள் பிரதமர்களின் ஊடக ஆலோசகராகவும், பல முன்னணி நாளிதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றிய இவருக்கு, 1998-இல் ஒன்றிய அரசு 'பத்ம பூஷன்' விருது வழங்கி கௌரவித்தது. இவரது மறைவிற்கு பத்திரிகையுலகை சேர்ந்த பலரும், அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.