அதிமுகவில் இருந்து தான் முன்பே விலகிவிட்டதாகவும், அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று (மே 21) தனபாலின் மகனும், ராசிபுரம் தவெக எம்எல்ஏவுமான லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமைச்சராக பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் தனபால் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து விலகிவிட்டேன். உடல்நிலையை கருத்தில் கொண்டு எந்த கட்சியிலும் நான் இப்போது இல்லை என்று கூறினார்.