சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷித ராஜபக்சேவை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இலங்கையின் பெலியத்த பகுதியில் வைத்து யோஷிதா ராஜபக்சே இன்று(ஜன.25) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்சேவுக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில், அவரது மூத்த மகன் நமல் ராஜபக்சே கடந்தாண்டு இறுதியில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.