மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் அபு ஹாசிம் கான் சவுத்ரி (89) உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர், மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2012 முதல் 2014ஆம் ஆண்டு வரை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். இவரது மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர், சமூகநீதி போன்றவற்றை உயர்த்திப் பிடித்தவர் என்று காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.