முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கே.பி.உண்ணிகிருஷ்ணன் (89), கோழிக்கோட்டில் இன்று (மார்ச்.3) அதிகாலை காலமானார். கேரளாவின் வடகரை மக்களவை தொகுதியிலிருந்து தொடர்ந்து 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1989-90 காலகட்டத்தில் வி.பி.சிங் அமைச்சரவையில் தரைவழி போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராக பணியாற்றியவர். இவரது மறைவு கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது.