ஒடிஷாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கன்ஹு சரண் லென்கா (86) உடல்நலக் குறைவால் இன்று (பிப்.13) காலமானார். கடந்த 1988 முதல் 1994 வரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய இவர், மத்திய ரயில்வே மற்றும் வேளாண் துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்து முத்திரை பதித்தவர். ஒடிசா மாநில அரசியலில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.