முன்னாள் மத்திய அமைச்சர் மொஹினா கித்வாய் காலமானார்

3பார்த்தது
முன்னாள் மத்திய அமைச்சர் மொஹினா கித்வாய் காலமானார்
மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மொஹ்சினா கித்வாய் (94) இன்று (ஏப்., 08) அதிகாலையில் நொய்டாவின் மெட்ரோ மருத்துவமனையில் காலமானார். வயது முதிர்வு தொடர்பான நோய்களால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிர் பிரிந்தது. முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி அமைச்சரவைகளில் பணியாற்றியதோடு, காங்கிரஸ் கட்சியில் பல உயர் பதவிகளையும் வகித்திருந்தார். தொழிலாளர் துறை, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கியத் துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி