சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் மாற்று கட்சியைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அறிவித்துள்ளது. சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் இபிஎஸ்-ஐ அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து ஆதரவைத் தெரிவித்தனர். ‘தேர்தலில் வென்று இபிஎஸ் முதலமைச்சராக பதவியேற்பார்’ என கதிரவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.