9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன் கைது

27பார்த்தது
9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த மோசடி மன்னன் கைது
கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த சுஷாந்த் பூஜாரி என்பவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு பணம், நகைகளை திருடிக்கொண்டு தப்பியுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், திருமணமாகாத பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு, அவர்களது நகைகள், பணத்தை திருடுவதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதுவரை அவர் 9 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.