சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, விழுப்புரம் செஞ்சிக் கோட்டையை சுற்றுலாப் பயணிகள் இன்று (மார்ச்.8) இலவசமாக பார்வையிடலாம் என தொல்பொருள் ஆராய்ச்சி துறை அறிவித்துள்ளது. வழக்கமாக வசூலிக்கப்படும் நுழைவ கட்டணம் இன்று ஒருநாள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரலாற்று சிறப்புகளை அனைவரும் அறிந்து கொள்ளவும், மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாகவும் இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.