11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்

6433பார்த்தது
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவ.14) சிவகங்கையில் தொடங்கி வைத்தார்.  2025-2026 கல்வியாண்டில் 5,34,017 மாணவ, மாணவியருக்கு 241 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளில் 22 லட்சம் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் 11,449 மாணவர்களுக்கு 5.18 கோடி ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன.

தொடர்புடைய செய்தி