‘வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்’.. அதிரடி ஆஃபர்

70பார்த்தது
‘வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம்’.. அதிரடி ஆஃபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள ஹோட்டல் நிர்வாகம் ஒன்று வணிக சிலிண்டர் கொடுத்தால் தினமும் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்தான விளம்பர பலகையில், “வணிக சிலிண்டர் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு தினமும் ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும். 2 வணிக சிலிண்டர்கள் கொடுத்தால் ஒரு மாதத்துக்கு தினமும் 2 சிக்கன் பிரியாணி வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, 2 கஸ்டமர்கள் இந்த "பிரியாணி சந்தா" திட்டத்தில் இணைந்துள்ளனர்.