இலவச சிலிண்டர் நிறுத்தம்.. ரூ.1 இட்லி பாட்டி வேதனை

4152பார்த்தது
இலவச சிலிண்டர் நிறுத்தம்.. ரூ.1 இட்லி பாட்டி வேதனை
கோவை வடவள்ளி அருகே வடிவேலம்பாளையத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்து வரும் பாட்டி, இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுத்தப்பட்டதாகக் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். தனக்கு வழங்கப்பட்டு வந்த இலவச சிலிண்டர் நிறுத்தப்பட்டதால், இட்லி விற்பனை தொழிலை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீண்டும் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி