சென்னை சைதாப்பேட்டையில் இலவச மருத்துவ முகாமை முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (மே 17) தொடங்கி வைத்தார். மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம், உடல் எடை, சர்க்கரை, மூட்டு வலி மற்றும் பெண்களுக்கான சிக்கல்களுக்கு இலவசமாக ஆலோசனையும் மருந்துகளும் வழங்கப்படுகிறது. முந்தைய
திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மா.சுப்பிரமணியன், 2026 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.