முதியோருக்கான இலவச ஆன்மிகப் பயணம்: தமிழக அரசு அறிவிப்பு

3972பார்த்தது
முதியோருக்கான இலவச ஆன்மிகப் பயணம்: தமிழக அரசு அறிவிப்பு
60 முதல் 70 வயதுக்குட்பட்ட 2 ஆயிரம் முதியோர்கள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு சென்று தரிசனம் செய்யும் வகையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை இலவச ஆன்மிகப் பயணத் திட்டத்தை செயல்படுத்துகிறது. திருச்செந்தூரில் இருந்து 6 சொகுசுப் பேருந்துகளில் 200 பேர் அடங்கிய முதல் குழு, அறுபடை வீடுகளுக்கு ஆன்மிகச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளது. இந்தப் பயணம் 14-ஆம் தேதி திருச்செந்தூரில் நிறைவடைகிறது.