சேனா, நௌசேனா விருது பெற்றவர்களுக்கு ரயில்களில் இலவச பயணம்

3252பார்த்தது
சேனா, நௌசேனா விருது பெற்றவர்களுக்கு ரயில்களில் இலவச பயணம்
சேனா, நௌசேனா மற்றும் வாயுசேனா விருதுகளை பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் இனி ரயில்களில் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயணம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சலுகையின் கீழ், முதல் வகுப்பு மற்றும் ஏசி வகுப்புகளில் கட்டணமின்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாட்டின் உயரிய விருதுகளை பெற்ற வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி