இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் பிரடெரிக் சோயஸ் நேற்று நியமிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 2024 முதல் இந்தப் பொறுப்பில் இருந்த கேரளாவைச் சேர்ந்த கோல்கீப்பர் ஸ்ரீஜேஷின் ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் இந்த நியமனம் நடைபெற்றுள்ளது.