வங்காளதேச பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழா நாளை மறுதினம் (பிப்.17) நடைபெற உள்ள நிலையில், இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பங்கேற்பார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏஐ உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் இந்தியா வர உள்ளார். அவர் நாளை மறுதினம் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இதனால், வங்காளதேச பிரதமர் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.