தெலங்கானா மாநிலத்தின் பாரம்பரிய கலாச்சாரத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், ஹைதராபாத் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் இனி ‘கள்’ மற்றும் நீரா (பதநீர்) போன்ற பாரம்பரிய பானங்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்துள்ளார். இந்த முயற்சி மூலம் உள்ளூர் பாரம்பரியம், பனைத் தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்கு ஊக்கம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.