விமான ஓட்டியாக தன் வாழ்க்கையை தொடங்கிய ராஜீவ் காந்தி, தனது சகோதரர்
சஞ்சய் காந்தியின் மறைவுக்கு பின்னரே எதிர்பாராத விதமாக அரசியலுக்குள் நுழைய நேரிட்டது. 1984-ல் தாய் இந்திரா காந்தியின் படுகொலைக்கு பிறகு, நாட்டின் மிக இளம் வயதான பிரதமராக பொறுப்பேற்று துணிச்சலான முடிவுகளை எடுத்தார். இந்தியாவில்
கணினி, தொலைத்தொடர்பு புரட்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டங்களை கொண்டுவந்து, நவீன இந்தியாவின் உருவாக்கத்திற்கு மிக முக்கிய அடித்தளமிட்டார்.