தேன், பசு நெய் உள்ளிட்ட உணவுபொருட்களில் "100% தூய்மையானது" போன்ற வாசகங்களை பயன்படுத்த நுகர்வோரை தவறாக வழிநடத்துவதாக கூறி இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் தடை விதித்தது. இந்த தடை உத்தரவை எதிர்த்து டாபர்
இந்தியா நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதுடன், விளக்கம் கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு இயற்கை நீதிக்கு எதிரானது என குற்றம் சாட்டியுள்ளது. மேலும், இந்நடைமுறை டாபர் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.