அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பணிபுரியும் தூய்மை காவலர்களுக்கான மாதாந்திர மதிப்பூதியத்தை ரூ.5,000-லிருந்து ரூ.6,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த ஊதிய உயர்விற்காக தோராயமாக ரூ.417 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களின் தொகுப்பூதியம் ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது தூய்மை பணியாளர்களின் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது.