கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்க ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக வேளாண்மைத்துறை அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் 'நம்மாழ்வார்' பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்துள்ளார்.