அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் இல்லத்தில் வைத்து பாமக MLA சதாசிவம் அவரை சந்தித்தார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சதாசிவம், "முன்னாள் கூட்டணி தலைவர், வருங்கால கூட்டணி தலைவர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். மேலும் அவரிடம் நலம் விசாரித்துவிட்டு மேலும் சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதித்தோம்" என கூறினார்.