ரசிகர்கள் "வருங்கால முதல்வர்" என ஆரவாரம் செய்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் வாயை மூடும்படி, சைகை காட்டினார். சென்னையில் பிரபல நகைக்கடை திறப்புவிழாவில் இன்று பங்கேற்ற சிவகார்த்திகேயனைக் காண ரசிகர்கள், பொதுமக்கள் திரண்டனர். அப்போது அவரை பார்த்து "வருங்கால முதல்வரே" எனக்கூறி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனைக் கேட்டு இன்ப அதிர்ச்சியடைந்த அவர், வாயில் கையை வைத்து 'பேசாமா இருங்கப்பா' என சொல்லும் வகையில், சைகை காட்டினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.