கூகுள் பே அறிமுகப்படுத்தியுள்ள 'UPI Circle' வசதி மூலம் வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியும். இதன் மூலம் கணக்கு வைத்திருப்பவர் (Primary Payer) அனுமதி அளிக்கும் பட்சத்தில், மற்றொரு நபர் (Secondary Payer) குறிப்பிட்ட வரம்பிற்குள் அந்த பணத்தை செலவிடலாம். இந்த வசதியில் பணத்தை செலவழிப்பதற்கான கட்டுப்பாடும் அனுமதியும் முழுமையாக முதன்மை பயனரிடமே இருக்கும்.