திரையரங்குகளைப் போலவே ஓடிடி தளங்களிலும் வாரந்தோறும் புதிய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில், நடிகர் ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' திரைப்படம், செல்லப்பிராணிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அனஸ்வரா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ள இப்படம், தற்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.