உத்தரப் பிரதேசம் மீரட்டில், டேனிஷ் என்பவர் தனது மனைவியையே பணயமாக வைத்து சூதாடியுள்ளார். தோல்வியடைந்ததால், அவரது மனைவி 8 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக கூறப்படுகிறது. பின்னர் கணவரும் இதில் ஈடுபட்டு, மனைவியை ஆற்றில் தள்ளியுள்ளார். மீட்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், டேனிஷ், 8 பேர் கொண்ட கும்பல், மாமனார், இருவர் மற்றும் மாமியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.