சென்னை திருவல்லிக்கேணியில் திடீரென கூட்டத்தை இடித்துக்கொண்டு வேகமாக வந்த விநாயகர் சிலை வாகனம், போலீசார் வைத்திருந்த பேரிகார்டு மீது மோதியதால் திருவல்லிக்கேணி பகுதி ஒரு நொடியில் பரபரப்பானது. விநாயகர் சிலையை கரைப்பதற்காக கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இன்று இரவில் நூற்றுக்கணக்கில் மக்கள் பங்கேற்றிருந்த ஊர்வலத்தில் விநாயகர் சிலையுடன் சென்ற வாகனம் திடீரென வேகமாக நகர்ந்து கூட்டத்தில் புகுந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் நெரிசலில் சிக்கிக்கொண்டனர்.