இந்தியாவில் மே மாதத்தில் சுமார் 21.2 லட்சம் மெட்ரிக் டன் சமையல் கியாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு இதே மாதத்தில் பயன்படுத்தப்பட்ட 26.2 லட்சம் மெட் ரிக் டன்னுடன் ஒப்பிடுகையில் 19.2 சதவீதம் குறைவாகும். இதுகுறித்து டெல்லி மின்சாரத் துறைத் தலைவர் அபிஷேக் நாத் கூறுகையில், “சிலிண்டர் பயன்பாடு குறைந்ததற்கு முக்கிய காரணம் விநியோகத் தடைகள். கியாஸ் பயன்பாட்டில் பெரிய அளவிலான கட்டமைப்பு மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. பலர் மின்சார அடுப்பு பயன்படுத்த தொடங்கியுள்ளனர்” என்கிறார்.