தனியார் ஆலையில் வாயுக்கசிவு: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

12பார்த்தது
தனியார் ஆலையில் வாயுக்கசிவு: 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஒரு தனியார் ஜவ்வரிசி ஆலையில் திடீரென நச்சு வாயுக்கசிவு ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட 6 பேர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாயுக்கசிவை தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வாயுக்கசிவு காரணத்தை கண்டறிய போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி