கடந்த அக். 7, 2023 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதை கண்காணிக்க அமெரிக்க வீரர்கள் காசாவுக்கு செல்கின்றனர். அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய டிரம்ப் இஸ்ரேல் சென்றுள்ளார்.