தொழிலதிபர் வீரமணி மீதான பாலியல் வழக்கில் ஓராண்டாக நடவடிக்கை எடுக்காமல்
திமுக அமைதியாக இருந்தது ஏன் என அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை எழும்பூரில் இன்று (செப்,23) பேட்டியளித்த அவர், தவெக ஆட்சியில் பாலியல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்படும் நபர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும், இவ்வழக்கு முதலமைச்சரின் நேரடி கண்காணிப்பில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வீரமணி வழக்கை கைவிட பல கோடி ரூபாய் கைமாறியுள்ளதாக அவர் கூறினார்.